South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

மகா தீபம் தரிசனத்துக்கு கட்டணமின்றி 3000 பேருக்கு அனுமதி: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

மகா தீபம் தரிசனத்துக்கு கட்டணமின்றி 3000 பேருக்கு அனுமதி: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 24ம் தேதி நடைபெறும் பரணி தீபம், மகா தீபம் தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் கட்டணமின்றி 3000 நுழைவுச் சீட்டுகள் பெற இன்று முதல் முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த ஆண்டுகளில் நடந்த தீபத்திருவிழாவில், பரணி தீபம் மற்றும் மகாதீபம் தரிசனத்திற்கான ரூ.500 மற்றும் ரூ.600 மதிப்பிலான 1600 கட்டண நுழைவுச் சீட்டுகள் இணையதள முன்பதிவு மூலம் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு பக்தர்களின் நலன்கருதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி, வரும் 24ம் தேதி நடைபெறும் பரணிதீபம் மற்றும் மகாதீபம் தரிசனத்திற்கான 3000 நுழைவுச் சீட்டுகள் முற்றிலும் இலவசமாக இணையதள முன்பதிவு மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 500 நுழைவுச்சீட்டுகள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு 500 நுழைவுச்சீட்டுகள் பரணி தீபத்திற்கு வழங்கப்படும்.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு 1000 நுழைவுச்சீட்டுகள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு 1000 நுழைவுச் சீட்டுகள் மகா தீபத்திற்கு இணையதள முன்பதிவு மூலம் வழங்கப்படும். நுழைவு சீட்டு பெற விரும்பும் பக்தர்கள், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, கோயில் அதிகாரப்பூர்வ இணையதளமான http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் இன்று (18ம் தேதி) காலை 11.00 மணி முதல் வரும் 20ம் தேதி மாலை 3 மணிவரை இலவசமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், வரும் 20ம் தேதி மாலை 4.00 மணியளவில், இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களில், கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி, தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு, மின்னணு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புடன் கூடிய குறுஞ்செய்தி, அவர்கள் முன்பதிவின்போது அளித்த கைப்பேசி எண்ணிற்கும், தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்களுக்கான மின்னணு நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து, 24ம் தேதி கோயிலின் நுழைவுவாயிலில் காண்பித்து, ஸ்கேன் செய்த பின்னர் கார்த்திகை தீப தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஆதார் அட்டையை அடையாளச் சான்றாகக் கொண்டு சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். பரணி தீபத்திற்கு பதிவு செய்பவரால். மகா தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது.

மகா தீபத்திற்கு பதிவு செய்பவரால் பரணி தீபத்திற்கு பதிவு செய்ய இயலாது. பரணி தீபத்திற்கான முன்பதிவு செய்பவர்கள் ஒரு சீட்டு மட்டுமே பதிவு செய்ய இயலும். மகா தீபத்திற்கு பதிவு செய்பவர்கள் வெவ்வேறு ஆதார் எண்ணைக்கொண்டு இரண்டு பதிவுகள் மேற்கொள்ளலாம். நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் மட்டுமே வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

📍 Tamilnadu
📰 Smacy News
🕒 5 days ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
⬅ Back
➕ Post Ad
To Ads ➡