South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஆசியான் நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா ; பிரதமர் அறிவிப்பு

ஆசியான் நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா ; பிரதமர் அறிவிப்பு

மணிலா: ஆசியான் கூட்டமைப்பு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் பயணியருக்கு இலவச மின்னணு விசா (e-visa) வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-ஆவது இந்தியா - ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் மோடி ஆசியான் கூட்டமைப்பைச் சேர்ந்த 11 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச மின்னணு விசா (Free E-Visa) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, கிழக்குத் திமோர் (Timor-Leste), மற்றும் வியட்நாம் ஆகிய 11 ஆசியான் உறுப்பு நாடுகளின் குடிமக்கள் இதன் மூலம் பயனடைவர். பிரதமரின் இந்த இலவச இ-விசா அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள் இதன் மூலம் இந்தியாவுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை மேம்படும் மற்றும் கலாச்சார பரிமாற்றம் மற்றும் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

📍 Tamilnadu
📰 Smacy News
🕒 5 days ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
⬅ Back
➕ Post Ad
To Ads ➡