South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலையில் சரண கோஷம் முழங்க கோயில் நடைதிறப்பு

மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலையில் சரண கோஷம் முழங்க கோயில் நடைதிறப்பு

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல கால வழிபாட்​டுக்​காக நேற்று மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. மங்​கல இசை மற்​றும் பக்​தர்​களின் சரண கோஷத்​தால் சந்​நிதானம் களைகட்​டியது. இதனைத் தொடர்ந்து, புதிய மேல்​சாந்​தி​கள் பொறுப்​பேற்​றுக் கொண்​டனர்.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல பூஜை டிச. 27-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதனைத் தொடர்ந்து, 41 நாட்​கள் மண்​டல கால வழிபாட்​டுக்​காக நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்​கப்​பட்​டது. மங்​கல இசை முழங்க மேல்​சாந்தி பிரசாத் நம்​பூதிரி கோயில் கரு​வறையைத் திறந்து வைத்து நெய் தீபம் ஏற்​றினார்.

தொடர்ந்து 18-ம் படி வழியே கீழிறங்கி சென்று ஆழிகுண்​டத்​தில் தேங்​காய் விளக்​கில் தீபம் ஏற்​றினார். பின்பு ஐயப்​பன் விக்​கிரகத்​தின் மேல் பூசப்​பட்​டிருந்த விபூதி, ருத்​ராட்ச மாலை அகற்​றப்​பட்டு யோகநித்​திரை நிலை மாற்​றப்​பட்​டது. இந்த விபூதி பக்​தர்​களுக்கு பிரசாத​மாக வழங்​கப்​பட்​டது.

புதிய மேல்​சாந்​தி​களாக சபரிமலைக்கு சுப்​பிரமணி​யன் நம்​பூதிரி, மாளி​கைப்​புரத்​தம்​மன் கோயிலுக்கு தாமோதரன் நம்​பூதிரி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்டு இருந்​தனர்.

இவர்​கள் இரு​வரும் இரு​முடி கட்​டுடன் பதினெட்​டாம்​படி வழியே ஏறினர். இவர்​களை முன்​னாள் மேல்​சாந்​தி​களான பிரசாத் நம்​பூதிரி, மனு நம்​பூதிரி ஆகியோர் கரம் பிடித்து அழைத்​துச் சென்​றனர். பின்பு கரு​வறை முன்​புள்ள சோபானம் எனும் புனித படிக்​கட்டு அருகே அமர வைத்து தந்​திரி கண்​டரரு பிரம்​மதத்​தன் இரு​வருக்​கும் சந்​தன அபிஷேகம் செய்து புனிதநீர் தெளித்​தார். பின்​னர், அவர்​களை கரு​வறைக்​குள் அழைத்​துச் சென்று மூல மந்​திரத்தை காதில் உப​தேசித்​தார்.

இதனைத் தொடர்ந்து இரு​வரும் மேல்​சாந்​தி​களாக பொறுப்​பேற்​றுக் கொண்​டனர். தொடர்ந்து நேற்று எவ்​வித பூஜையும் இன்றி தரிசனம் மட்​டுமே நடை​பெற்​றது. பின்​னர் இரவு 11 மணி​யளவில் ஹரிவ​ராசனம் எனும் உறக்​கப் பாடலுடன கோயில் நடை சாத்தப்பட்டது.

முதல்நாளான நேற்று காலை​யில் இருந்தே நிலக்​கல்​லில் பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. இருப்​பினும் மாலை​யில் நடை திறக்​கப்​பட்​ட​தால் பிற்​பகலில் இருந்தே பம்​பைக்​குச் செல்ல அனுமதிக்​கப்​பட்​டனர். மண்​டல வழிபாட்​டுக் காலம் தொடங்​கிய​தால் சந்​நிதானம், பம்பை, நிலக்​கல், எரு​மேலி மட்​டுமல்​லாது வனப்​பாதை மற்​றும் தேனி உள்​ளிட்ட பல்​வேறு வழித்​தடங்​களும் பக்​தர்​கள் வருகை​யால் களை கட்​டியது.

📍 Salem
📰 Hindu Tamil
🕒 6 days ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
⬅ Back
➕ Post Ad
To Ads ➡