South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

பதக்கம் வென்ற ஜெஹான், சஹானா ரவிக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

பதக்கம் வென்ற ஜெஹான், சஹானா ரவிக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

சென்னை: ஜப்​பானில் நடை​பெற்று வரும் பாரா ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதன் மற்​றும் வீராங்​கனை பேபி சஹானா ரவி ஆகியோ​ருக்கு தலா ரூ.30 லட்​சம் ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஜப்​பானில் நடை​பெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளை​யாட்டுப் போட்​டிகளில் டேபிள் டென்​னிஸ் ஆண்​கள் ஒற்​றையர் கிளாஸ் 1 பிரி​வில் ஜெஹான் டொரப் மதன் மற்​றும் பெண்​கள் கிளாஸ் 9 பிரி​வில் பேபி சஹானா ரவி ஆகியோர் வெண்​கலப் பதக்​கங்​களை வென்று தமிழகத்​துக்​கும், இந்​தி​யா​வுக்​கும் பெருமை சேர்த்​துள்​ளனர்.

அவர்​களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள் மற்​றும் பாராட்​டுகள். இவர்​களது சாதனையை அங்​கீகரிக்​கும் வகை​யில், தமிழக அரசு சார்​பில் தலா ரூ.30 லட்​சம் உயரிய ஊக்​கத்​தொகை இரு​வருக்​கும் வழங்​கப்​படும்.

தமிழகத்​தைச் சேர்ந்த இளம் பாரா விளை​யாட்டு வீரர், வீராங்​க​னைகளுக்கு ஊக்​கத்​தையும், உத்​வேகத்​தையும் அளிக்​கும் வகை​யில் இவர்​களின் வெற்றி அமைந்​துள்​ளது.

உலக ஸ்​கேட்​டிங் போட்​டி

இதேபோல், பாராகுவே நாட்​டின் அசுன்​சி​யோன் நகரில் நடை​பெற்ற உலக ஸ்​கேட்​டிங் போட்​டிகள் 2026 தொடரின் மாரத்​தான் பிரி​வில் தங்​கப்​ப​தக்​கம் வென்று சாதனை படைத்த தமிழக ஸ்கேட்​டிங் வீரர் ஆனந்த்​குமாருக்​கும், ஜூனியர் பெண்​களுக்​கான 3000 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யில் வெண்​கலப் பதக்​கம் வென்ற தமிழக வீராங்​க​னைகள் லட்​சிதா, பிரகதி மற்​றும் ருத்வ ஆகியோ​ருக்​கும் எனது வாழ்த்​துகள்.

ஆனந்த்​குமார் இந்த தொடரில் ஏற்​கெனவே 500 மீட்​டரில் வெண்​கலமும், 1000 மீட்​டரில் வெள்​ளி​யும் வென்​றுள்ள நிலை​யில், தற்​போது மூன்​றாவ​தாக தங்​கப் பதக்​கத்​தையும் கைப்​பற்றி அசத்​தி​யுள்​ளார்.

இச்​சாதனைகள் விளை​யாட்​டுத் துறை​யில் சாதனை படைக்​கத் துடிக்​கும் இளைய தலைமுறை​யினருக்கு புதிய ஊக்​கத்​தையும், உத்​வேகத்​தையும் அளிக்​கும். பதக்​கங்​களை வென்ற வீரர், வீராங்​க​னைகள் மேலும் பல உயரங்​களை எட்ட வாழ்த்து​கிறேன். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

📍 chennai
📰 Hindu Tamil
🕒 33 days ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
⬅ Back
➕ Post Ad
To Ads ➡