ட்ரம்ப் போட்ட தடை; வெள்ளை மாளிகை கவரேஜைப் புறக்கணித்த US செய்தி நிறுவனங்கள் - என்ன நடந்தது?
CNN, MS NOW, Politico-வை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தடை செய்த நிலையில், CNN-க்குப் பதிலாக வேறு நெட்வொர்க்கை அனுப்பாமல் ஐந்து TV நெட்வொர்க்குகளும் TV Pool-ஐ நிறுத்தின.
அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை அதிகம் விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களில் முக்கியமானவை - CNN, MS NOW மற்றும் Politico.
இதை ட்ரம்ப் விரும்பவில்லை. இதனால், இந்த மூன்று செய்தி நிறுவனங்களையும் ‘போலிச் செய்திகளைப் பரப்புகின்றன’ என்று வெள்ளை மாளிகைக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்தார் ட்ரம்ப்.
இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியானது.
போலிச் செய்திகளைப் பரப்பினால் (அதாவது ட்ரம்ப்பை விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்டால்) இன்னும் பல செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையில் தடை செய்யப்படும் என்று வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.