South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க வேண்டும்: நடிகர் சூரி ஆசை

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க வேண்டும்: நடிகர் சூரி ஆசை

முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அக். 2-ல் வெளியாகிறது.

இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் தாணு, தமிழ்க்குமரன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், நடிகர்கள் சூரி, விக்ராந்த், சஞ்சீவ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சூரி பேசும்போது, “சஞ்சய் இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் ஜெயிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்து மட்டுமல்லாது கோடிக்கணக்கானவர்களின் அன்பும் வாழ்த்தும் இருக்கிறது. அவருடைய தன்மையான பண்பு அவரை பெரிய இடத்துக்குக் கொண்டு செல்லும். எல்லோருடைய ஆசைக்காக சஞ்சய் ஹீரோவாக நடிக்கவும் வேண்டும்” என்றார்.
ஜேசன் சஞ்சய் பேசும்போது, “இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு தேவை, சிக்கல் இருக்கும். அப்போது அவர்கள் எடுக்கும் முடிவால் அவர்கள் வாழ்க்கையே மாறுவதுதான் ‘சிக்மா’.

இது என்னுடைய முதல் படம் என்பதால் எப்போதுமே ஸ்பெஷல். இந்தப் படத்தின் கதையை லைகாவின் சுபாஸ்கரன் சாரிடம் சொன்னபோது எனக்கு 22 வயது. அந்த வயதில் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி” என்றார்.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 2 days ago

Related News

மதுராந்தகம் திமுக வேட்பாளரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செப்.27-ல் பிரச்சாரம்
மதுராந்தகம் திமுக வேட்பாளரை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி செப்.27-ல் பிரச்சாரம்
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
Back
Post Ad
To Ads