South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்! 12 கோபுரங்களில் கலசங்களுக்கு புனித நீராட்டு!!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்! 12 கோபுரங்களில் கலசங்களுக்கு புனித நீராட்டு!!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வியாழக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.

தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் உலகப் புகழ்பெற்றது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்.
இரண்​டா​யிரம் ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பழமை​யான வரலாறு மட்டுமின்றி, தமிழ்​மொழி, சங்​கம், கலை மற்​றும் பண்​பாட்​டின் தொன்​மை​யான மையமாகத் திகழும் மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, மகா குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, புனரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதனையொட்டி மதுரை மாநகர் விழாக் கோலம் பூண்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 5 லட்சம் டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று (செப். 16) காலை 6 மணிக்​குள் தட்​சிணா​மூர்த்​தி, துர்க்​கை, லெட்​சுமி, பத்​ர​காளி, 63 நாயன்​மார்​கள் மற்​றும் கொடி மரங்​கள் உள்பட 414 பரி​வார தெய்​வங்​களுக்கு குட​முழுக்கு நடை​பெற்​றது. குட​முழுக்கை முன்​னிட்டு கோயி​லில் உள்ள 4 கோபுரங்​கள் உள்பட 12 கோபுரங்​களுக்​கும் நிலை மாலைகள் சாற்​றப்​பட்​டன.

📍 Tamilnadu
📰 Dinamani
🕒 6 days ago

Related News

டிசம்பரில் பிரதமர் மோடி கனடா பயணம்: மார்க் கார்னி தகவல்
டிசம்பரில் பிரதமர் மோடி கனடா பயணம்: மார்க் கார்னி தகவல்
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
Back
Post Ad
To Ads