பா. இரஞ்சித்தின் வேட்டுவம் அப்டேட்!
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வேட்டுவம் திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் நீண்ட காலமாக வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் ஆர்யா, விஆர் தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகத் தெரிகிறது.