... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#அசாம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அசாம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கவுகாத்தி: அசாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பா.ஜ ஆட்சியை வீழ்த்த மக்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மகனுமான கவுரவ் கோகாய் தற்போது காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 126 தொகுதியில் காங்கிரஸ் 100 தொகுதிகளிலும், மீதம் உள்ள தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அசாம் சென்ற பிரியங்கா காந்தி முதற்கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தார். அந்த பட்டியல் நேற்று வெளியானது. இதில் ஜோர்ஹட் தொகுதியில் கவுரவ் கோகாய் நிறுத்தப்பட்டுள்ளார். அசாம் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேபப்ரதா , இந்த தேர்தலில் நசிரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Source : Dinakaran

12 days ago

Home Flash News